Song 1020
இருட்குழலைக் குலைத்துமுடித்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனத்ததனத் தனத்ததனத்தனதான
Lyrics
இருட்குழலைக் குலைத்துமுடித்தெழிற்கலையைத் திருத்தியுடுத்திணைக்கயலைப் புரட்டிவிழித்ததிபார
இழைக்களபப் பொருப்பணிகச்செடுத்துமறைத் தழைத்துவளைத்திருத்தியகப் படுத்திநகைத்துறவாடி
பொருட்குமிகத் துதித்திளகிப்புலப்படுசித் திரக்கரணப்புணர்ச்சிவிளைத் துருக்குபரத்தையர்மோகப்
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்பொறுத்தருளிச் சடக்கெனஅப்புறத்திலழைத் திருத்தியளித்திடுவாயே
உ ருத்திரரைப் பழித்துலகுக்குகக்கடையப் பெனக்ககனத்துடுத்தகரப் படுத்துகிரித்தலமேழும்
உ டுத்தபொலப் பொருப்புவெடித்தொலிப்பமருத் திளைப்பநெருப்பொளிக்கஇருப் பிடத்தைவிடச்சுரரோடித்
திரைக்கடலுட் படச்சுழலச்செகத்ரையமிப் படிக்கலையச்சிரித்தெதிர்கொக் கரித்துமலைத்திடுபாவி
செருக்கழியத் தெழித்துதிரத்திரைக்கடலிற் சுழித்தலையிற்றிளைத்தஅயிற் கரக்குமரப்பெருமாளே.
