Song 1019
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்தானத் தாத்தத் தனதனதத்தானத் தாத்தத் தனதனதத்தானத் தாத்தத் தனதனதனதான
Lyrics
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழிசற்றேறப் பார்த்துச் சிலபணிவிடையேவிச்
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடுபித்தேறிக் கூப்பிட் டவர்பரிசெட்டாமற் றுர்த்தத் தலைபடுசிறுகாலை
உ ற்றார்பெற் றார்க்குப் பெரிதொருபற்றாயப் பூட்டுக் கயிறுகொடுச்சாயத் தாக்கைத் தொழிலொடுதடுமாறி
உ க்காரித் தேக்கற் றுயிர்நழுவிக்காயத் தீப்பட் டெரியுடலுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வதுமொருநாளே
வற்றாமுற் றாப்பச் சிளமுலையிற்பால்கைப் பார்த்துத் தருமொருமைக்காமக் கோட்டக் குலமயில்தருபாலா
மத்தோசைப் போக்கிற் றயிருறிநெய்பாலுக் காயச்சிக் கிருபதம்வைத்தாடிக் காட்டிப் பருகரிமருகோனே
கற்றாவிற் காட்டிக் கரைதுறைநற்றாயிற் காட்டிப் புகழ்கலைகற்றார் சொற் கேட்கத் தனிவழிவருவோனே
கைச்சூலக் கூற்றைக் கணைமதனைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழிகர்த்தாவுக் கேற்கப் பொருளருள்பெருமாளே.
