Song 1010
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதான
Lyrics
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருதகலசமு மதனுய ரம்பொன் மாமுடியதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியுமொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமெனம்ருகமத களபம ணிந்த சீதளஅபிநவ கனதன மங்கை மாருடன்விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தருமலைகட லளறுப டிந்து வாயமுதினிதென அருளஅ ருந்தி யார்வமொடிதமாகி
இருவரு மருவிய ணைந்து பாழ்படுமருவினை யறவும றந்து னீள்தருமிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வதுமொருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரியுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்துதிசெய எதிர்பொர வந்த தானவரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவைநடமிட நிணமலை துன்ற வேயதில்துவரிது புளியிது தொய்ந்த தீதிதுஇதுவீணால்
பருகுத லரியது கந்த தீதிதுஉ ளதென குறளிகள் தின்று மெதகுபசிகெட வொருதனி வென்ற சேவகமயில்வீரா
பகிரதி சிறுவலி லங்க லுடுறுகுறமகள் கொழுநப டர்ந்து மேலெழுபருவரை யுருவஎ றிந்த வேல்வலபெருமாளே.
