Song 1009
முருகு லாவிய குழலினு நிழலினும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனதான
Lyrics
முருகு லாவிய குழலினு நிழலினும்அருவ மாகிய இடையினு நடையினுமுளரிபோலுநல் விழியினு மொழியினுமடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினும்இறுக வாரிடு மலையெனு முலையினுமுடிவி லாததொர் கொடுவிட மடுவிதமயலாகி
நரகி லேவிழு மவலனை யசடனைவழிப டாதவொர் திருடனை மருடனைநலமி லாவக கபடனை விகடனைவினையேனை
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொலதனில் மூழ்கிய மறவனை யிறவனைநளின மார்பத மதுபெற ஒருவழியருள்வாயே
வரிய ராவினின் முடிமிசை நடமிடுபரத மாயவ னெழுபுவி யளவிடுவரதன் மாதவ னிரணிய னுடலிருபிளவாக
வகிரு மாலரிதிகிரிய னலையெறிதமர வாரிதி முறையிட நிசிசரன்மகுட மானவை யொருபதும் விழவொருகணையேவுங்
கரிய மேனியன் மருதொடு பொருதவன்இனிய பாவல னுரையினி லொழுகியகடவுள் வேயிசை கொடுநிரை பரவிடுமபிராமன்
கருணை நாரண னரபதி சுரபதிமருக கானக மதனிடை யுறைதருகரிய வேடுவர் சிறுமியொ டுருகியபெருமாளே.
