Song 1008
இலகு வேலெனு மிருவினை விழிகளும்
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனன தானன தனதன தனதனதனதான
Lyrics
இலகு வேலெனு மிருவினை விழிகளும்எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்இசையி னால்வசை பொசிதரு மொழிகளுமெதிர்வேகொண்
டெதிரிலாவதி பலமுடை யிளைஞரெனினிய மாவினை யிருளெனும் வலைகொடுஇடைவி டாதெறு நடுவனு மெனவளைமடவார்தம்
கலவி மால்கொடு கலைகளு மறிவொடுகருதொ ணாதென முனிவுற மருள்கொடுகரையி லாவிதி யெனுமொரு கடலிடைகவிழாதே
கருணை வானவர் தொழுதெழு மயிலுறைகுமர கானவர் சிறுமியொ டுருகியகமல தாளிணை கனவிலு நினைவுறஅருள்தாராய்
பலகை யோடொரு பதுசிர மறஎறிபகழி யானர வணைமிசை துயில்தருபரமன் மால்படி யளவிடு மரிதிருமருகோனே
பழுதி லாமன முடையவர் மலர்கொடுபரவ மால்விடை மிசையுறை பவரொடுபரம ஞானமு மிதுவென வுரைசெய்தபெரியோனே
அலகை காளிகள் நடமிட அலைகடலதனில் நீள்குடல் நிணமலை பிணமலைஅசுரர் மார்பக மளறது படவிடுமயில்வேலா
அரிய பாவல ருரைசெய அருள்புரிமுருக ஆறிரு புயஇய லிசையுடன்அழகு மாண்மையு மிலகிய சரவணபெருமாளே.
