Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1007

முருகு செறிகுழ லவிழ்தர முகமதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான

Lyrics

முருகு செறிகுழ லவிழ்தர முகமதிமுடிய வெயர்வர முதுதிரை யமுதனமொழிகள் பதறிட வளைகல கலவெனஅணைபோக

முலையின் மிசையிடு வடமுடி யறஇடைமுறியு மெனஇரு பரிபுர மலறிடமுகுள அலரிள நிலவெழ இலவிதழ்பருகாநின்

றுருகி யுளமுட லுடலொடு செருகிடவுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்துதவு மடமக ளிர்களொடு மமளியிலநுராக

உ ததி யதனிடை விழுகினு மெழுகினும்உ ழலு கினுமுன தடியிணை எனதுயிருதவி யெனவுனை நினைவது மொழிவதுமறவேனே

எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறிதிடமு மிலையென வுலவிட அலகையின்இனமும் நிணமுண எழுகுறள் களுமியலிசைபாட

இகலி முதுகள மினமிசை யொடுதனியிரண பயிரவி பதயுக மிகுநடமிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனுவிருகாலும்

வரிசை யதனுடன் வளைதர வொருபதுமகுட மிருபது புயமுடன் மடிபடவலியி னொருகணை விடுகர முதலரிநெடுமாயன்

மருக குருபர சரவண மதில்வருமகிப சுரபதி பதிபெற அவுணர்கள்மடிய இயல்கொளு மயில்மிசை வரவலபெருமாளே.

All songs →