Song 1006
பகிர நினைவொரு தினையள விலுமிலி
- Sthalam
- பொதுப்பாடல்கள்
- Raagam
- ஸஹானா
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 1/2 தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
பகிர நினைவொரு தினையள விலுமிலிகருணை யிலியுன தருணையொ டுதணியல்பழநி மலைகுரு மலைபணி மலைபலமலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்பழகி யழகிலி குலமிலி நலமிலிபதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையிலிகுலாலன்
திகிரிவருமொரு செலவிநி லெழுபதுசெலவு வருமன பவுரிகொ டலமருதிருக னுருகுத லழுகுதல் தொழுகுதல்நினையாத
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலிதிருடன் மதியிலி கதியிலி விதியிலிசெயலி லுணர்விலி சிவபத மடைவதுமொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்மகுட மொருபது மிருபது திரள்புயவரையு மறவொரு கணைதெரிபுயல்குருந்ருபதூதன்
மடுவில் மதகரிமுதலென வுதவியவரத னிருதிறல் மருதொடு பொருதவன்மதலை குதலையின் மறைமொழி யிகழிரணியனாகம்
உ கிரினுதிகொடு வகிருமொ ரடலரிதிகிரிதரமர கதகிரியெரியுமிழ்உ ரக சுடிகையில் நடநவி லரிதிருமருகோனே
உ ருகு மடியவ ரிருவினை யிருள்பொருமுதய தினகர இமகரன் வலம்வரும்உ லக முழுதொரு நொடியினில் வலம்வருபெருமாளே.
