Song 1011
உ ரைதரு பரசம யங்க ளோதுவ
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதந்ததான
Lyrics
உ ரைதரு பரசம யங்க ளோதுவதுருவென அருவென வொன்றி லாததொரொளியென வெளியென வும்ப ராமெனஇம்பராநின்
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமெனவுரைசெய அதுபொருள் கண்டு மோனமொடுணர்வுற வுணர்வொடி ருந்ந நாளுமழிந்திடாதே
பரகதி பெறுவதொ ழிந்தி டார்வனபரிசன தெரிசன கந்த வோசைகள்பலநல விதமுள துன்ப மாகிமயங்கிடாதே
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்பலபல விதமுள துன்ப சாகரபடுகுழி யிடைவிழு பஞ்ச பாதகனென்றுதீர்வேன்
அரகர சிவசுத கந்த னேநினதபயம பயமென நின்று வானவர்அலறிட வொழிகினி யஞ்சி டாதெனஅஞ்சல்கூறி
அடல்தரு நிருதர நந்த வாகினியமபுர மடையஅ டர்ந்து போர்புரிஅசுரன தகலமி டந்து போகவகிர்ந்தவேகம்
விரிகடல் துகளெழ வென்ற வேலவமரகத கலபசி கண்டி வாகனவிரகுள சரவண முந்தை நான்மறையந்தமோதும்
விரைதரு மலரிலி ருந்த வேதனும்விடவர வமளிது யின்ற மாயனும்விமலைகொள் சடையர னும்ப ராவியதம்பிரானே.
