Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 1002

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான

Lyrics

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரிசுகியன் வடைகனல் கதலியி னமுதொடுகனியு முதுபல கனிவகை நலமிவையினிதாகக்

கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுறஅமுது துதிகையில் மனமது களிபெறகருணை யுடனளி திருவருள் மகிழ்வுறநெடிதான

குடகு வயிறினி லடைவிடு மதகரிபிறகு வருமொரு முருகசண் முகவெனகுவிய இருகர மலர்விழி புனலொடுபணியாமற்

கொடிய நெடியன அதிவினை துயர்கொடுவறுமை சிறுமையி னலைவுட னரிவையர்குழியில் முழுகியு மழுகியு முழல்வகையொழியாதோ

நெடிய கடலினில் முடுகியெ வரமுறுமறலி வெருவுற ரவிமதி பயமுறநிலமு நெறுநெறு நெறுவென வருமொருகொடிதான

நிசிசர் கொடுமுடி சடசட சடவெனபகர கிரிமுடி கிடுகிடு கிடுவெனநிகரிலயில்வெயி லெழுபசு மையநிறமுளதான

நடன மிடுபரிதுரகத மயிலதுமுடுகி கடுமையி லுலகதை வலம்வருநளின பதவர நதிகுமு குமுவெனமுநிவோரும்

நறிய மலர்கொடு ஹரஹர ஹரவெனஅமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசைநணியெ சரவண மதில்வள ரழகியபெருமாளே.

All songs →