Song 1003
கமல குமிளித முலைமிசை துகிலிடு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான)
Lyrics
கமல குமிளித முலைமிசை துகிலிடுவிகட கெருவிக ளசடிகள் கபடிகள்கலக மிடுவிழி வலைகொடு தழுவிகளிளைஞோர்கள்
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்அநெக விதமொடு தனியென நடவிகள்கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமைநாடி
அமுத மொழிகொடு தவநிலை யருளியபெரிய குணதர ருரைசெய்த மொழிவகைஅடைவு நடைபடி பயிலவு முயலவுமறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனெனஇனமு மனிதரு ளனைவரு முரைசெயஅடிய னிதுபட அரிதினி யொருபொருளருள்வாயே
திமித திமிதிமி டமடம டமவெனசிகர கரதல டமருக மடிபடதெனன தெனதென தெனவென நடைபடமுநிவோர்கள்
சிவமி லுருகியு மரகர வெனவதிபரத பரிபுர மலரடி தொழஅநுதினமு நடமிடு பவரிட முறைபவள்தருசேயே
குமர சரவண பவதிற லுதவியதரும நிகரொடு புலமையு மழகியகுழக குருபர னெனவொரு மயில்மிசைவருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடைமலையு மரையொடு பசலைகொள் வளர்முலைகுலவு குறமக ளழகொடு தழுவியபெருமாளே.
