Song 1001
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
- Sthalam
- பொதுப்பாடல்கள்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனதான
Lyrics
இலகி யிருகுழை கிழிகயல் விழியினுமிசையி னசைதரு மொழியினு மருவமர்இருள்செய் குழலினு மிடையினு நடையினுமநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினுமிளைய ம்ருகமத தனகுவ டழகினுமியலு மயல்கொடு துணிவது பணிவதுதணியாதே
குலவி விரகெனு மளறிடை முழுகியகொடிய நடலைய னடமிட வருபிணிகுறுகி யிடஎம னிறுதியி லுயிரதுகொடுபோநாள்
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்குதறு முதுபிண மெடுமென வொருபறைகுணலை யிடஅடு சுடலையில் நடவுதலினிதோதான்
மலையில் நிகரில தொருமலை தனையுடல்மறுகி யலமர அறவுர முடுகியவலிய பெலமிக வுடையவ னடையவுமதிகாய
மவுலி யொருபது மிருபது கரமுடன்மடிய வொருசரம் விடுபவபன் மதகரிமடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில்மதியாதே
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளியஅதுல னிருபத மதுதனி லெழுபுவியடைய அளவிட நெடுகிய அரிதிருமருகோனே
அவுண ருடலம தலமர அலைகடலறவு மறுகிட வடகுவ டனகிரியடைய இடிபொடி படஅயில் விடவலபெருமாளே.
