பாடல் 985
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறை
- தலம்
- இந்தம்பலம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதனன தந்தந் தனத்ததனதனன தனதனன தந்தந் தனத்ததனதனன தனதனன தந்தந் தனத்ததனதனதான
பாடல் வரிகள்
அமல கமலவுரு சங்கந் தொனித்தமறைஅரிய பரமவெளி யெங்கும் பொலித்தசெயலளவு மசலமது கண்டங் கொருத்தருளவறியாத
தகர முதலுருகொ ளைம்பந் தொரக்ஷரமொடகில புவனநதி யண்டங் களுக்குமுதலருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல்நடுவான
கமல துரியமயி லிந்துங் கதிர்ப்பரவுகனக நிறமுடைய பண்பம் படிக்கதவககன சுழிமுனையி லஞ்சுங் களித்தமுதசிவயோகம்
கருணை யுடனறிவி தங்கொண் டிடக்கவுரிகுமர குமரகுரு வென்றென் றுரைப்பமுதுகனிவு வரஇளமை தந்துன் பதத்திலெனையருள்வாயே
திமிலை பலமுருடு திந்திந் திமித்திமிதடுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுடதிகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்ததிகுதீதோ
செகண செகணசெக செஞ்செஞ் செகக்கணெனஅகில முரகன்முடி யண்டம் பிளக்கவெகுதிமிர்த குலவிருது சங்கந் தொனித்தசுரர்களமீதே
அமரர் முழுமிமலர் கொண்டங் கிறைத் தருளஅரிய குருகுகொடி யெங்குந் தழைத்தருளஅரியொ டயன்முனிவ ரண்டம் பிழைத்தருளவிடும்வேலா
அரியின் மகள்தனமொ டங்கம் புதைக்க முகஅழகு புயமொடணை யினபங் களித்துமகிழ்அரிய மயிலயில்கொ டிந்தம் பலத்தின்மகிழ்பெருமாளே.
