பாடல் 984
வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
- தலம்
- இராமேசுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தனத்ததன தானா தனத்ததனதானா தனத்ததனதனதான
பாடல் வரிகள்
வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்மீதே பணிக்கும்வகையறியாதே
மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினிலு¡டே யணைத்துதவுமதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைகளேதோ வெனக்கலவிபலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழுசேறாடல் பெற்றதுயரொழியேனோ
மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரினூடேகி நிற்குமிருகழலோனே
மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனைவீரா குறச்சிறுமிமணவாளா
ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளைநாணா துரைக்குமொருபெரியோனே
நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகுராமே சுரத்திலுறைபெருமாளே.
