பாடல் 966
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
- தலம்
- மதுரை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்தந் தான தானனதனதன தத்தந் தான தானனதனதன தத்தந் தான தானனதனதான
பாடல் வரிகள்
மனநினை சுத்தஞ் சூது காரிகள்அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்மதபல நித்தம் பாரி நாரிகளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்வரமிகு வெட்கம் போல வோடிகள்தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்தனகிக ளிச்சம் பேசி கூசிகள்குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள்பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்படஅருளமு தத்தின் சேரு மோர்வழிகுறிதனி லுய்த்துன் பாத மேறிடஅருள்தாராய்
தனதன தத்தந் தான தானனடுடுடுடு டுட்டுண் டூடு டூடுடுதகுதிகு தத்தந் தீத தோதகஎனபேரி
தவில்முர சத்தந் தாரை பூரிகைவளைதுடி பொற்கொம் பார சூரரைசமர்தனில் முற்றும் பாறி நூறிடவிடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்நகைமுறை முத்தின் பாவை மான்மகள்திகழ்பெற நித்தங் கூடி யாடியமுருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறையழகிய சொக்கன் காதி லோர்பொருள்செலவரு ளித்தென் கூடல்மேவியபெருமாளே.
