பாடல் 965
நீதத் துவமாகி - நேமத் ...... துணையாகிப்
- தலம்
- மதுரை
- ராகம்
- ஷண்முகப்ரியா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமி-2, தகதகிட-2 1/2தானத் தனதான தானத்தனதான
பாடல் வரிகள்
நீதத் துவமாகி - நேமத்துணையாகிப்
பூதத் தயவான - போதைத்தருவாயே
நாதத் தொனியோனே - ஞானக்கடலோனே
கோதற் றமுதானே - கூடற்பெருமாளே.
