பாடல் 850
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதந்தன தனதந்தன தனதந்தன தானதனதந்தன தனதந்தன தனதந்தன தானதனதந்தன தனதந்தன தனதந்தன தானத்தனதான
பாடல் வரிகள்
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசியணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோரஇருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக்குயில்பொலே
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பாரஇலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மானஇயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித்தெருமீதே
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீசநடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாடபரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப்பரிவாகிப்
பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோரஇதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாறபகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத்துயர்தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரிடகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணைசெகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக்கொடுசூரர்
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளிநிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோடசிலசெம்புள்கள் கழுகுஞ் சிறு நரியுங்கொடி யாடப்பொரும்வேலா
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணியிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதிவளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத்தருசேயே
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொடிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூரவருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப்பெருமாளே.
