உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 849

கருத்தி தப்படு காமா லீலைகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்த தத்தன தானா தானனதனத்த தத்தன தானா தானனதனத்த தத்தன தானா தானனதனதான

பாடல் வரிகள்

கருத்தி தப்படு காமா லீலைகள்விதத்தை நத்திய வீணா வீணிகள்கவட்டு விற்பன மாயா வாதிகள்பலகாலுங்

கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படுவினையேனை

உ ரைத்த புத்திகள் கேளா நீசனையவத்த மெத்திய ஆசா பாசனையுளத்தில் மெயப்பொரு ளோரா மூடனையருளாகி

உ யர்ச்சி பெற்றிடு மேலா மூதுரையளிக்கு நற்பொரு ளாயே மாதவவுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணையருள்வாயே

செருக்கி வெட்டிய தீயோ ராமெனுமதத்த துட்டர்கள் மாசூ ராதியசினத்தர் பட்டிட வேவே லேவியமுருகோனே

சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்கதித்த முத்தமிழ் மாலா யோதியசெழிப்பை நத்திய சீலா வீறியமயில்வீரா

வரைத்த வர்க்கரர் சூலா பாணியரதிக்கு ணத்தரர் தீரா தீரர்தமனத்தி யற்படு ஞானா தேசிகவடிவேலா

வருக்கை யிற்கனி சாறாய் மேலிடுதழைத்த செய்த்தலை யூடே பாய்தருமருத்து வக்குடி வாழ்வே தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →