உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 823

கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தானதன தத்தனா தாத்ததனதனன தானதன தத்தனா தாத்ததனதனன தானதன தத்தனா தாத்ததனதான

பாடல் வரிகள்

கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்களவுமத னூல்பலப டித்தவா வேட்கைகனதனமு மார்புமுற லிச்சையா லார்த்துகழுநீரார்

கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்துநிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கைகருதாதே

தலமடைசு சாளரமு கப்பிலே காத்துநிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்ததெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தைதடுமாறித்

தழுவியது ராகமும்வி ளைத்துமா யாக்கைதனையுமரு நாளையும வத்திலே போக்குதலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷதரவேணும்

அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றிஅருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றிஅடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றிஅவதான

அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றிஅகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றிஅருணகிரி நாதஎனும் அப்பனே போற்றிஅசுரேசர்

பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றிகரதலக பாலிகுரு வித்தனே போற்றிபெரியகுற மாதணைபு யத்தனே போற்றிபெருவாழ்வாம்

பிரமனறி யாவிரத தக்ஷ¢ணா மூர்த்திபரசமய கோளிரித வத்தினால் வாய்த்தபெரியமட மேவியசு கத்தனே யோக்யர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →