பாடல் 822
பாலோ தேனோ பலவுறு சுளையது
- தலம்
- திருவர்ருர்
- ராகம்
- குந்தல வராளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - 2 களை (16)தானா தானா தனதன தனதனதானா தானா தனதன தனதனதானா தானா தனதன தனதனதனதான
பாடல் வரிகள்
பாலோ தேனோ பலவுறு சுளையதுதானோ வானோர் அமுதுகொல் கழைரசபாகோ வூனோ டுருகிய மகனுணவருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடுவேலோ கோலோ விழியென முகமதுபானோ வானூர் நிலவுகொ லெனமகண்மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலக்ஷண் முகவொளியேதோ மாதோம் எனதகம் வளரொளிநானோ நீயோ படிகமொ டொளிரிடமதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடுதூணேர் தோளா சுரமுக கனசபைநாதா தாதா எனவுரு கிடஅருள்புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவதாரா சூரா எனமுநி வர்கள்புகழ்மாயா ரூபா அரகர சிவசிவஎனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்கோகோ கோகோ எனமலை வெடிபடவாளால் வேலால் மடிவுசெய் தருளியமுருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்ஓதார் சீராள் கதிர்மதி குலவியதோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன்அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபதவாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடுசூழ்சீ ரர்ருர் மருவிய இமையவர்பெருமாளே.
