உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 808

பச்சை யொண்கிரி போலிரு மாதன

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (7 1/2)(எடுப்பு - 3/4 தள்ளி)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தத்த தந்தன தானன தானனதத்த தந்தன தானன தானனதத்த தந்தன தானன தானனதனதான

பாடல் வரிகள்

பச்சை யொண்கிரி போலிரு மாதனமுற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்பற்று புண்டரி காமென ஏய்கயல்விழிஞான

பத்தி வெண்டர ளாமெனும் வாணகைவித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்பத்ம செண்பக மாமநு பூதியினழகாளென்

றிச்சை யந்தரி பார்வதி மோகினிதத்தை பொன்கவி னாலிலை போல்வயிறிற்ப சுங்கிளி யானமி னூலிடையபிராமி

எக்கு லங்குடி லோடுல கியாவையுமிற்ப திந்திரு நாழிநெ லாலறமெப்பொ தும்பகிர் வாள்கும ராஎனவுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடைபொற்பு யங்களும் வேலுமி ராறுளகட்சி வங்கம லாமுக மாறுளமுருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுறசித்தர் விஞ்சையர் மாகர்ச பாசெனகட்ட வெங்கொடு சூர்கிளை வேரறவிடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்பச்சை வண்புய னார்கரு டாசனர்நற்க ரந்தநு கோல்வளை நேமியர்மருகோனே

நற்பு னந்தனில் வாழ்வளி நாயகியிச்சை கொண்டொரு வாரண மாதொடுநத்தி வந்துந ளாறுறை தேவர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →