உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 807

குங்குமகற் பூர நாவி யிமசல

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்ததனத் தான தான தனதனதந்ததனத் தான தான தனதனதந்ததனத் தான தான தனதனதனதான

பாடல் வரிகள்

குங்குமகற் பூர நாவி யிமசலசந்தனகத் தூரி லேப பரிமளகொங்கைதனைக் கோலி நீடு முகபடநகரேகை

கொண்டைதனைக் கோதி வாரி வகைவகைதுங்கமுடித் தால கால மெனவடல்கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொருமமுதேயாம்

அங்குளநிட் டூர மாய விழிகொடுவஞ்சமனத் தாசை கூறி யெவரையுமன்புடைமெய்க் கோல ராக விரகினிலுறவாடி

அன்றளவுக் கான காசு பொருள்கவர்மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழலன்றியுனைப் பாடி வீடு புகுவதுமொருநாளே

சங்கதசக் ¡£வ னோடு சொலவளமிண்டுசெயப் போன வாயு சுதனொடுசம்பவசுக் ¡£வ னாதி யெழுபதுவெளமாகச்

சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்தங்கிளைகெட் டோட ஏவு சரபதிமருகோனே

எங்குநினைப் போர்கள் நேச சரவணசிந்துரகர்ப் பூர ஆறு முககுகஎந்தனுடைச் சாமி நாத வயலியிலுறைவேலா

இன்புறுபொற் கூட மாட நவமணிமண்டபவித் தார வீதி புடைவளர்இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →