பாடல் 80
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
- தலம்
- திருச்செந்தூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தானனந் தானனந் தானதனதான தானனந் தானனந் தானதனதான தானனந் தானனந் தானதனதந்ததானா
பாடல் வரிகள்
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடையோதி மோகுலம் போலசம் போகமொடுபாடி பாளிதங் காருகம் பாவையிடைவஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண் டானகுவடாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்பாவ மேகபொன் சாபமிந் தேபொருவரந்தமீதே
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழிதோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகைவாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசையன்புளார்போல்
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழிவேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழிவாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்சந்தமாமோ
தீத தோதகந் தீததிந் தோதிதிமிடூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடுடீகு டீகுகம் போலவொண் பேரிமுரசங்கள்வீறச்
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடுமங்கிவேலா
தாதை காதிலங் கோதுசிங் காரமுகமாறும் வாகுவுங் கூரசந் தானசுகதாரி மார்பலங் காரியென் பாவைவளியெங்கள்மாதைத்
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிகளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடுதாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறைதம்பிரானே.
