பாடல் 79
பருத்தந்தத் தினைத்தந்திட்
- தலம்
- திருச்செந்தூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தந்தத் தனத்தந்தத்தனத்தந்தத் தனத்தந்தத்தனத்தந்தத் தனத்தந்தத்தனதான
பாடல் வரிகள்
பருத்தந்தத் தினைத்தந்திட்டிருக்குங்கச் சடர்த்துந்திப்பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத்தனமானார்
பரிக்குந்துற் சரக்கொன்றத்திளைத்தங்குற் பலப்பண்பைப்பரக்குஞ்சக் கரத்தின்சத்தியைநேரும்
துரைச்செங்கட் கடைக்கொன்றிப்பெருத்தன்புற் றிளைத்தங்குத்துணிக்கும்புத் தியைச்சங்கித்தறியேனைத்
துணைச்செம்பொற் பதத்தின்புற்றெனக்கென்றப் பொருட்டங்கத்தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப்படியாள்வாய்
தருத்தங்கப் பொலத்தண்டத்தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்தடத்துன்பத் தினைத்தந்திட்டெதிர்சூரன்
சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்தலத்தும்பர்ப் பதிக்கன்புற்றருள்வோனே
திருக்கஞ்சத் தனைக்கண்டித்துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப்பகர்வோனே
செயத்துங்கக் கொடைத்துங்கத்திருத்தங்கித் தரிக்கும்பொற்றிருச்செந்திற் பதிக்கந்தப்பெருமாளே.
