பாடல் 796
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
- தலம்
- திருவிடைக்கழி
- ராகம்
- கல்யாணி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - கண்டசாபு (2 1/2)தனதனனத் தனதான தனதனனத் தனதானதனதனனத் தனதானதனதான
பாடல் வரிகள்
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவானபகரும்வினைச் செயல்மாதர்தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாதுபழமைபிதற் றிடுலொகமுமுடர்
உ ழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடியொருபயனைத் தெளியாதுவிளியாமுன்
உ னகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூறஉ னதுதிருப் புழோதஅருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேருதிடுதிடெனப் பலபூதர்விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்ஜெயஜெயெனக் கொதிவேலைவிடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேலஅடல்தருகெற் சிதநீலமயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடைஅதிபஇடைக் கழிமேவுபெருமாளே.
