பாடல் 795
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்கருப்
- தலம்
- திருவிடைக்கழி
- ராகம்
- ரேவதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5)தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தனனதன தத்தனத் தனனதன தத்தனத்தனனதன தத்தனத்தனதான
பாடல் வரிகள்
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்கருப்பவமுறைய வத்தைமுக்குணநீடு
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்பசிபடுநி ணச்சடக்குடில்பேணும்
உ டலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்குணர்வுடைய சித்தமற்றடிநாயேன்
உ ழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்துனதுதம ரொக்கவைத்தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்கொடிபடர்பு யக்கிரிக்கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்குமரமகிழ் முத்தமிழ்ப்புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்தடலனுச வித்தகத்துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்தருதிருவி டைக்கழிப்பெருமாளே.
