பாடல் 774
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர்ருபகம்)தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதன தாந்த தான தனதன தாந்த தானதனதன தாந்த தானதனதான
பாடல் வரிகள்
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சாலதினகர னேய்ந்த மாளிகையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்வயிரியர் சேர்ந்து பாடஇருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலைபுழுககில் சாந்து பூசியரசாகி
இனிதிரு மாந்து வாழு மிருவினை நீண்ட காயமொருபிடி சாம்ப லாகிவிடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசைமயிலொடு பாங்கி மார்களருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகிமலைமிசை தோன்று மாயவடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறுகருணைகொள் பாண்டி நாடுபெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராயகவுணியர் வேந்த தேவர்பெருமாளே.
