பாடல் 773
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
- தலம்
- சீகாழி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்தத்தனா தத்தனத்தனதான
பாடல் வரிகள்
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்தெற்கிலு¡ தைக்கனற்றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்சித்தம்வா டிக்கனக்கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்கற்பதா ருச்செகத்த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்கைக்குணான் வெட்கிநிற்பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்தப்ரதா பர்க்குமெட்டரிதாய
தத்வவே தத்தனுற் பத்திபோ தித்தஅத்தத்வ்ரு பக்கிரிப்புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்குத்துரா வுத்தபொற்குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்கொச்சைவாழ் முத்தமிழ்ப்பெருமாளே.
