பாடல் 764
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
- தலம்
- சீகாழி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதனதன தனதன தந்த தானனதந்ததான
பாடல் வரிகள்
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்அரிவையர் வசையுட னங்கி போல்வரஅசைவன விடைமணி யன்றில் கோகிலம்அஞ்சிநானும்
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழஅகிலொடு ம்ருகமத நஞ்சு போலுறஅணிபணி மணிபல வெந்து நீறெழஅங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினைவழிவச மறஅற நின்று சோர்வுறமுழுதுகொள் விரகனல் மொண்டு வீசிடமங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணிமுளரியொ டழகிய தொங்கல் தாரினைமுனிவற நினதருள் தந்தென் மாலைமுனிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவிதிரிபுரை பயிரவி திங்கள் சூடியதிகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள்சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்திமிலையொ டறைபறை நின்று மோதிடசிவனுட னடம்வரு மங்கை மாதுமைதந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்மாலரடி வருடியெ நின்று நாடொறுமயில்பயில் குயில்கிளி வம்பி லேகடிதொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுரமதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள்தம்பிரானே.
