பாடல் 754
அஞ்சுவித பூத முங்கரண நாலு
- தலம்
- நிம்பபுரம்
- ராகம்
- ஸிம்மேந்திர மத்யமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதிதந்ததன தான தந்ததன தானதந்ததன தானதனதான
பாடல் வரிகள்
அஞ்சுவித பூத முங்கரண நாலுமந்திபகல் யாதுமறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தானஅந்தவொரு வீடுபெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்மங்கைதனை நாடிவனமீது
வந்தசர ணார விந்தமது பாடவண்டமிழ்வி நோதமருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராமகுங்குமப டீரவதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்பகுன்றுதடு மாறஇகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீரவென்றிவடி வேலைவிடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாணவிண்டலம கீபர்பெருமாளே.
