பாடல் 753
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (15 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2தனதன தனதன தனதன தாந்ததாத்தான தந்ததனதான
பாடல் வரிகள்
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்துகூத்தாடு கின்றகுடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்கோட்டாலை யின்றியவிரோதம்
வரஇரு வினையற உ ணர்வொடு தூங்குவார்க்கே விளங்குமநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்தவாக்கால்மொ ழிந்தருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்துதேர்ப்பாகன் மைந்தன்மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்துதீப்பாய இந்த்ரபுரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்குவேற்கார கந்தபுவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்தவேப்பூர மர்ந்தபெருமாளே.
