உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 622

எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தனதனன தத்தத்த தந்ததனதத்தத்த தந்ததன--------- 3 முறை ----------தந்ததான

பாடல் வரிகள்

எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருதுகுத்தித் திறந்துமலை

யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகிமுத்துச் செறிந்தவட

மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரினிற்கொத்து மங்குசநெருங்குபாகர்

எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்பதைக்கக்க டிந்துமிக

இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனுமுட்கத்தி ரண்டிளகி

யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்புடைத்துச்சி னந்துபொருகொங்கையானை

பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவியொக்கத்து வண்டமளி

புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்செக்கச்சி வந்தமுது

பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலையமுத்தத்து டன்கருணைதந்துமேல்வீழ்

புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்தட்டுப்ப டுந்திமிர

புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரியசட்டைக்கு ரம்பையழி

பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியினிர்த்தச் சரண்களைமறந்திடேனே

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதிதத்தத்த தந்ததத

தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெததிக்கட்டி கண்டிகட

ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரிததக்கத்த குந்தகுர்ததிந்திதீதோ

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகடடக்கட்ட கண்டகட

டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகடடுட்டுட்டு டுண்டுடுடு

திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகுகுக்குக்கு குங்குகுகுஎன்றுதாளம்

முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியுடுக்கைப்பெ ரும்பதலை

முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரமகத்திக்க ளும்பரவ

முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலையமிக்கக்க வந்தநிரைதங்கியாட

முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவரவுக்ரப்பெ ருங்குருதி

முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வேடிக்கத்து ணிந்ததிர

முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகிவெட்டிக்க ளம்பொருததம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →