பாடல் 621
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே
- தலம்
- கொடுங்குன்றம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனந்த தந்தம் தந்தம் தந்தந்தந்ததான
பாடல் வரிகள்
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங்கண்களாலே
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங்கொங்கையாலே
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும்பெண்களாலே
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின்றின்புறாதோ
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந்தெந்தெனானா
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின்தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந்துன்றுசோலை
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந்தம்பிரானே.
