பாடல் 601
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தாத்தத் தத்த தாத்தத்தத்த தாத்தத்தனதான
பாடல் வரிகள்
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்தத்தை மார்க்குத்தமராயன்
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்றச்சு தோட்பற்றியவோடும்
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்சிக்கை நீக்கித்திணிதாய
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்செச்சை சாத்தப்பெறுவேனோ
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்கொற்ற வேத்துக்கரசாய
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்பொற்ப வேற்கைக்குமரேசா
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்தெட்டு மேற்றுத்திடமேவும்
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்சத்ய வாக்யப்பெருமாளே.
