பாடல் 600
அத்து கிரினலது ரத்து அலனவள
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தனதனன தத்த தனதனனதத்த தனதனனதனதான
பாடல் வரிகள்
அத்து கிரினலது ரத்து அலனவளகத்து வளர்செய்புளகிதபூத
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகியத்தி யிடனுறையுநெடுமாம
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைதலத்து ரகசிகரிபகராதே
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரையத்தி னிடையடிமைவிழலாமோ
தத்து கவனவரி ணத்து வுபநிடவிதத்து முநியுதவுமொழியாறுத்
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்தத்தை தழுவியபனிருதோளா
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்தத்து மலையவுணர்குலநாகந்
தத்த மிசைமரக தத்த மனியமயில்தத்த விடுமமரர்பெருமாளே.
