உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 596

வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தந் தான தானன தனத்தந் தான தானனதனத்தந் தான தானனதனதான

பாடல் வரிகள்

வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதருமயக்கம் பூண மோதியதுரமீதே

மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகியமரிக்கும் பேர்க ளோடுறவணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடியபிறப்புந் தீர வேயுனதிருதாளே

பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்பெலத்தின் கூர்மை யானதுமொழிவாயே

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடுஎதிர்த்துஞ் சூரர் மாளவெபொரும்வேலா

இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன்எனத்திண் கூளி கோடிகள்புடைசூழத்

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்செழித்தன் பாக வீறியபெருவாழ்வே

திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தருதிருச்செங் கோடு மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →