பாடல் 595
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தத்தத்தனதான)
பாடல் வரிகள்
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றேநிச்சார் துற்பப்பவவேலை
விட்டே றிப்போ கொட்டா மற்றேமட்டே யத்தத்தையர்மேலே
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்பத்தார் விற்பொற்கழல்பேணிப்
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்முற்பா லைக்கற்பகமேதான்
செச்சா லிச்சா லத்தே றிச்சேலுற்றா ணித்துப்பொழிலேறுஞ்
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்நித்தா செக்கர்க்கதிரேனல்
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்முத்தார் வெட்சிப்புயவேளே
முத்தா முத்தீ யத்தா சுத்தாமுத்தா முத்திப்பெருமாளே.
