உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 574

எதிரெதிர்கண் டோ டி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்ததனதனனந் தான தாத்ததனதான

பாடல் வரிகள்

எதிரெதிர்கண் டோ டி யாட்கள் களவதறிந் தாசை பூட்டிஇடறிவிழும் பாழி காட்டுமடமாதர்

இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கிலிளமைகொடுங் காத லாற்றில்நிலையாத

அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லு஡த்தைஅடையுமிடஞ் சீலை தீற்றுகருவாயில்

அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்தஅளறிலழுந் தாம லாட்கொடருள்வாயே

விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றிவிரகினெழுந் தோய நூற்றுவருமாள

விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்றவிஜயனெடும் பாக தீர்த்தன்மருகோனே

மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்வழியருளின் பேறு காட்டியவிராலி

மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்வழியருளின் பேறு காட்டுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →