உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 56

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தனா தந்தனா தந்தனா தந்தனாதந்தனாதந்ததான

பாடல் வரிகள்

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலேசஞ்சலாரம்பமாயன்

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பராசம்ப்ரமாநந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்வம்பிலேதுன்புறாமே

வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடேவந்துநீயன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனேகந்தனேவிஞ்சையூரா

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவாகண்டலேசன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவேசென்றுமோதும்ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்செந்தில்வாழ்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →