பாடல் 55
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்
- தலம்
- திருச்செந்தூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்தந்தனா தந்தனத்தனதான
பாடல் வரிகள்
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்சந்தமோ கின்பமுத்தெனவானிற்
றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்பென்றுதாழ் வொன்றறுத்துலகோரைத்
துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்கொண்டுதாய் நின்றுரைத்துழலாதே
துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத்தொண்டினா லொன்றுரைக்கருள்வாயே
வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்துண்டுமே லண்டருக்கமுதாக
விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக்குண்டுபே ரம்பலத்தினிலாடி
செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்தின்கணா டுந்திறற்கதிராழித்
திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்செந்தில்வாழ் செந்தமிழ்ப்பெருமாளே.
