பாடல் 497
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தான தனத்தம் தான தனத்தம்தான தனத்தம்தனதான
பாடல் வரிகள்
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்காடுகள் புக்குந்தடுமாறிக்
காயகனி துய்த்துங் காயமொ றுத்துங்காசினி முற்றுந்திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்தேற வுதிக்கும்பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்சீதள பத்மந்தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்பாழ்பட வுக்ரந்தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்பாடலை மெச்சுங்கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்சோலை சிறக்கும்புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்தோகை நடத்தும்பெருமாளே.
