பாடல் 496
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிடதகதிமி-3 1/2தனன தானன தனன தானனதனன தானனதனதான
பாடல் வரிகள்
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொனிடம தேறியெனிருநோயும்
எரிய வேமல மொழிய வேசுடரிலகு மூலகவொளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்அருளெ லாமெனதளவாக
அருளி யேசிவ மகிழ வேபெறஅருளி யேயிணையடிதாராய்
பரம தேசிகர் குருவி லாதவர்பரவை வான்மதிதவழ்வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்பரம ராசியர்அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமெனமகிழ்மெய் ஞானமுமருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குறமகள்மெ லாசைகொள்பெருமாளே.
