உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 487

வாத பித்தமொடு சூலை விப்புருதி

ராகம்
கானடா
தாளம்
ஆதி 4 களை (32)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

அமைப்புதகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதந்ததான

பாடல் வரிகள்

வாத பித்தமொடு சூலை விப்புருதியேறு கற்படுவ னீளை பொக்கிருமல்மாலை புற்றெழுத லு஡சல் பற்சனியொடந்திமாலை

மாச டைக்குருடு காத டைப்பு செவிடூமை கெட்டவலி மூல முற்றுதருமாலை யுற்றதொணு றாறு தத்துவர்களுண்டகாயம்

வேத வித்துபரி கோல முற்றுவிளையாடு வித்தகட லோட மொய்த்தபலவேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்சிங்கியாலே

வீடு கட்டிமய லாசை பட்டுவிழவோசை கெட்டுமடி யாமல் முத்திபெறவீட ளித்துமயி லாடு சுத்தவெளிசிந்தியாதோ

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடிநீறு பட்டலற சூர வெற்பவுணரோடு பட்டுவிழ வேலை விட்டபுகழங்கிவேலா

ஓந மச்சிவய சாமி சுத்தஅடியார்க ளுக்குமுப காரி பச்சையுமைஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்தந்தசேயே

ஆதி கற்பகவி நாய கர்க்குபிறகான பொற்சரவ ணாப ரப்பிரமனாதி யுற்றபொருள் ஓது வித்தமையறிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவனமேவி சுத்தமண மாடி நற்புலியுராட கப்படிக கோபு ரத்தின்மகிழ்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →