Song 487
வாத பித்தமொடு சூலை விப்புருதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
அமைப்புதகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதான தத்ததன தான தத்ததனதந்ததான
Lyrics
வாத பித்தமொடு சூலை விப்புருதியேறு கற்படுவ னீளை பொக்கிருமல்மாலை புற்றெழுத லுசல் பற்சனியொடந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவிடூமை கெட்டவலி மூல முற்றுதருமாலை யுற்றதொணு றாறு தத்துவர்களுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளையாடு வித்தகட லோட மொய்த்தபலவேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழவோசை கெட்டுமடி யாமல் முத்திபெறவீட ளித்துமயி லாடு சுத்தவெளிசிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடிநீறு பட்டலற சூர வெற்பவுணரோடு பட்டுவிழ வேலை விட்டபுகழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடியார்க ளுக்குமுப காரி பச்சையுமைஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிறகான பொற்சரவ ணாப ரப்பிரமனாதி யுற்றபொருள் ஓது வித்தமையறிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவனமேவி சுத்தமண மாடி நற்புலியுராட கப்படிக கோபு ரத்தின்மகிழ்தம்பிரானே.
