உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 456

மந்தர மென்குவ டார்த னங்களி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தன தந்தன தான தந்தனதான தனந்தன தான தந்தன------------ 3 தரம் -----தந்ததான

பாடல் வரிகள்

மந்தர மென்குவ டார்த னங்களிலார மழுந்திட வேம ணம்பெறுசந்தன குங்கும சேறு டன்பனிநீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசிமஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்வாள்விழி செங்கழு நீர்த தும்பியகொந்தளோலை

வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடைவாடந டம்புரி வார்ம ருந்திடுவிஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்மோகன வஞ்சியர் போல கம்பெறவந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்போல இருந்ததெ னாம யங்கிடஇன்சொல்கூறிச்

சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்வாருமெ னும்படி யால கங்கொடுபண்சர சங்கொள வேணு மென்றவர்சேம வளந்துறு தேன ருந்திடதுன்றுபொ னங்கையின் மீது கண்டவரோடு விழைந்துமெ கூடி யின்புறுமங்கையோரால்

துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடுசீபுழு வுஞ்சல மோடி றங்கியபுண்குட வன்கடி யோடி ளஞ்சனிசூலைமி குந்திட வேப றந்துடல்துஞ்சிய மன்பதி யேபு குந்துயராழி விடும்படி சீர்ப தம்பெறுவிஞ்சைதாராய்

அந்தர துந்துமி யோடு டன்கணநாதர் புகழ்ந்திட வேத விஞ்சையரிந்திர சந்திரர் சூரி யன்கவிவாணர்த வம்புலி யோர்ப தஞ்சலிஅம்புய னந்திரு மாலொ டிந்திரைவாணிய ணங்கவ ளோட ருந்தவர்தங்கள்மாதர்

அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்மாவுர கன்புவி யோர்கள் மங்கையர்அம்புவி மங்கைய ரோட ருந்ததிமாதர் புகழ்ந்திட வேந டம்புரிஅம்புய செம்பதர் மாட கஞ்சிவகாம சவுந்தரி யாள்ப யந்தருள்கந்தவேளே

திந்திமி திந்திமி தோதி மிந்திமிதீததி திந்தித தீதி திந்திமிதந்தன தந்தன னாத னந்தனதான தனந்தன னாவெ னும்பறைசெந்தவில் சங்குட னேம ழங்கசுரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல்கண்டவேலா

செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில்வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறுதாளழ கங்கையின் வேலு டன்புவிசெம்பொனி னம்பல மேல கம்பிரகாரச மந்திர மீத மர்ந்தருள்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →