உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 455

கொந்த ளம்புழு கெந்த வண்பனி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்த தந்தன தந்த தந்தனதந்த தந்தன தந்த தந்தனதந்த தந்தன தந்த தந்தனதனதான

பாடல் வரிகள்

கொந்த ளம்புழு கெந்த வண்பனிரம்ப சம்ப்ரம ணிந்த மந்தரகொங்கை வெண்கரி கொம்பி ணங்கியமடமாதர்

கொந்த ணங்குழ லின்ப மஞ்சளணிந்து சண்பக வஞ்சி ளங்கொடிகொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில்மயில்போலே

வந்து பஞ்சணை யின்ப முங்கொடுகொங்கை யும்புய முந்த ழும்புறமஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவமயல்மேலாய்

வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவியுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்தவஞ்சி னங்களு டன்கி டந்துடலழிவேனோ

தந்த னந்தன தந்த னந்தனதிந்தி மிந்திமி திந்தி மிந்திமிசங்கு வெண்கல கொம்பு துந்துமிபலபேரி

சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணிதங்கு டுண்டுடு டுண்டு டன்பலசந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர்களமீதே

சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழுசெம்பு ளங்கரு டன்ப ருந்துகள்செங்க ளந்திகை யெங்கு மண்டிடவிடும்வேலா

திங்க ளிந்திர னும்ப ரந்தரரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபைசெம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →