உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 444

விந்துப் புளகித இன்புற் றுருகிட

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தத் தனதன தந்தத் தனதனதந்தத் தனதன தந்தத் தனதனதனத்த தனதன தனத்த தனதனதனத்த தனதன தனத்த தனதன--------- 3 முறை -----------தனதான

பாடல் வரிகள்

விந்துப் புளகித இன்புற் றுருகிடசிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளிவிரித்த கமலமெல் தரித்து ளொருசுழியிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி

விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடுமிண்டிச் செயலினி ரம்பித் துருவொடுமெழுக்கி லுருவென வலித்து எழுமதிகழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்

விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழிவந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடுவிழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடுகவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவருமருள்கூர

மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலையுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடைதுடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு

வெண்டைப் பரிபுர தண்டைச் சரவடமுங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடுவிதித்த முறைபடி படித்து மயல்கொளதெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை

விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதிதுண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழிவிடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலெனநடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வருவழியேபோய்ச்

சத்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசைகொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொடணைத்து மலரிதழ் கடித்து இருகரமடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்

சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிடசரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத

சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடுவம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினைசலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணிபிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர்நரைமேவித்

தன்கைத் தடிகொடு குந்திக் கவியெனஉந்திக் கசனம றந்திட் டுளமிகசலித்து வுடல்சல மிகுத்து மதிசெவிவிழிப்பு மறைபட கிடத்தி மனையவள்

சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்சண்டக் கருநம னண்டிக் கொளுகயிறெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனைபதைப்ப தனிவழி யடித்து கொடுசெல

சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறைதடிப்ப சுடலையி லிறக்கி விறகொடுகொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனுமுடலாமோ

திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமிதிந்தித் திமிதிமி திந்தித் திமிதிமிதிமித்தி திமிதிமி திமித்தி திமிதிமிதிமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி

என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடிபம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளைதிகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடுடிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு

செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணிபொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசைசெழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்களித்து வகைமனி முழக்க அசுரர்கள்களமீதே

சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெசிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு

செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்ததும்பக் கருடன டங்கொட் டிடகொடிமறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்

செம்பொற் பவளமு டங்கிக் கமர்விடவெந்திட் டிகமலை விண்டுத் துகள்படசிமக்கு முரகனு முழக்கி விடபடமடைத்த சதமுடி நடுக்கி யலைபடவிடும்வேலா

தொந்தத் தொகுகுட என்பக் கழலொலிபொங்கப் பரிபுர செம்பொற் பதமணிசுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடிகரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்

தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணிகங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்மிகுத்த புரமதை யெரித்த நகையினர்

தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்தொந்திக் கடவுளை தந்திட் டவரிடசுகத்தி மழுவுழை கரத்தி மரகதநிறத்தி முயலக பதத்தி அருளியமுருகோனே

துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடைரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்சுகிப்ப மணவறை களிக்க அணையறுமுகத்தொ டுறமயல் செழித்த திருபுய

செம்பொற் கரகம லம்பத் திருதலமம்பொற் சசியெழ சந்தப் பலபடைசெறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடைசிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்

தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனிடைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசைநடித்து அழல்கிரி பதிக்குள் மருவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →