பாடல் 443
விதிய தாகவெ பருவ மாதரார்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2தனன தானன தனன தானனாதனன தானனம்தனதான
பாடல் வரிகள்
விதிய தாகவெ பருவ மாதரார்விரகி லேமனந்தடுமாறி
விவர மானதொ ரறிவு மாறியேவினையி லேஅலைந்திமுடன்
முதிய மாதமி ழிசைய தாகவேமொழிசெய் தேநினைந்திடுமாறு
முறைமை யாகநி னடிகள் மேவவேமுனிவு தீரவந்தருள்வாயே
சதிய தாகிய அசுரர் மாமுடீதரணி மீதுகுஞ்சமராடிச்
சகல லோகமும் வலம தாகியேதழைய வேவருங்குமரேசா
அதிக வானவர் கவரி வீசவேஅரிய கோபுரந்தனில்மேவி
அருணை மீதிலே மயிலி லேறியேஅழக தாய்வரும்பெருமாளே.
