பாடல் 431
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்த தந்த தான தத்த தந்ததான தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்குதோகை யர்க்கு நெஞ்சமழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்றுசூழ்பி ணிக்க ணங்களணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்துபாசம் விட்டெ றிந்துபிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்தபாடல் மிக்க செஞ்சொல்தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்பவீர பத்ர கந்தமுருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்துவேலை யிற்றொ ளைந்தகதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்தகோம ளக்கு ரும்பைபுணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்தகோபு ரத்த மர்ந்தபெருமாளே.
