பாடல் 430
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
- தலம்
- திருவருணை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானன தான தத்த தானன தான தத்ததானன தான தத்ததனதான
பாடல் வரிகள்
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சுதேனளி சூழ மொய்த்தமலராலே
சீறும ராவெ யிற்றி லுறிய காளம் விட்டசீதநி லாவெ றிக்குமனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்டபோர்மத ராஜ னுக்குமழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்தபூவையை நீய ணைக்கவரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சைமாயனு மாத ரிக்குமயில்வீரா
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்வாரண மான தத்தைமணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்துவீதியின் மேவி நிற்குமுருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்வேலடை யாள மிட்டபெருமாளே.
