உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 41

கரிக்கொம்பந் தனித்தங்கங்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனதானா

பாடல் வரிகள்

கரிக்கொம்பந் தனித்தங்கங்குடத்தின்பந் தனத்தின்கண்கறுப்புந்தன் சிவப்புஞ்செம்பொறிதோள்சேர்

கணைக்கும்பண் டுழைக்கும்பங்களிக்கும்பண் பொழிக்குங்கண்கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன்குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்றுகிற்றந்தந் தரிக்குந்தன்சடத்தும்பண் பிலுக்குஞ்சம்பளமாதர்

சலித்தும்பின் சிரித்துங்கொண்டழைத்துஞ்சண் பசப்பும் பெண்தனத்துன்பந் தவிப்புண்டிங்குழல்வேனோ

சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்செழுத்தின்பங் களித்துண்பண்சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங்கசுராரைத்

துவைத்தும்பந் தடித்துஞ்சங்கொலித்துங்குன் றிடித்தும்பண்சுகித்துங்கண் களிப்புங்கொண்டிடும்வேலா

சிரப்பண்புங் கரப்பண்புங்கடப்பந்தொங் கலிற்பண்புஞ்சிவப்பண்புந் தவப்பண்புந்தருவோனே

தினைத்தொந்தங் குறப்பெண்பண்சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்செழிக்குஞ்செந் திலிற்றங்கும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →